டெல்லி: ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
உ.பி. சட்டமன்ற தேர்தலையொட்டி, அங்கு பிரசாரத்திற்கு சென்ற ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். அவரது கார்மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து, அவர் வேறு காரில் டெல்லி சென்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அசாதீன் ஒவைசிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி இனிமேல், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இசட் பிரிவு பாதுகாப்பு ஓவைசிக்கு வழங்கப்படுகிறது. ஆயுதம் தாங்கிய 45 கமாண்டோக்கள் 24 மணி நேரமும் இருவருக்கும் அவர்களது வீட்டிலும், அவர்கள் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.