டெல்லி :நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் சேவையை தான் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தொலைத்தொடர்பு துறை சார்பாக அனைத்து அமைச்சகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்திலும், தரைவழி இணைப்பு தொலைபேசி, இணையதள இணைப்பு- பிராட்பேண்ட் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் சேவையை மட்டுமே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் சேவையை பயன்படுத்த, தங்களின் கீழ் உள்ள நிர்வாக அமைப்புகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.