புதுடெல்லி:
மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்துகிறபோது, அவர்களின் மன உறுதியைக் குலைத்து விடும், பாதுகாப்பின்மை உணர்வையும் ஏற்படுத்தி விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது சுகாதார பாதுகாப்பு முறையை மோசமாக பாதித்து விடும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து துரித விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்
Patrikai.com official YouTube Channel