டெல்லி: ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசானது 4382 கோடியை நிவாரணத் தொகையாக விடுவிக்க ஒப்புதல் அளித்து உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு, இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து ரூ. 4,382 கோடியை விடுவிக்க ஒப்புதல் அளித்து உள்ளார். புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரண உதவியாக மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கத்திற்கு ரூ.2,707.77 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.128.23 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவுக்கு ரூ. 268.59 கோடியும் கர்நாடகாவுக்கு ரூ. 577.84 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்திற்கு ரூ.611.61 கோடியும், சிக்கிம் மாநிலத்துக்கு ரூ.87.84 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.