டெல்லி: விஸ்டா நமக்கு அவசியமற்றது , தொலைநோக்கு பார்வையுடைய அரசே அவசியம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.
நாடுமுழுவதும் கொரோனா 2வது அலை பரவி வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தடுமாறி வருகின்றன. மருந்து, ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்தியஅரசை விமர்சித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,
புதிய நாடாளுமன்றக் கட்டடம் (விஸ்டா) அவசியமற்றது. தொலைநோக்குடைய மத்திய அரசே தற்போது தேவையானது என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் இந்திய மக்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ள நிலையில், மோடி அரசோ, புதிய பாராளுமன்றத்தை கட்டமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதற்கான டெண்டர்களையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.