சென்னை:
 சென்டிரல் ரெயில் நிலையத்தில் அதிவேக வை-பை இன்டர்நெட் வசதியை மத்திய ரெயில்வே அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு
                                                                   ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு

வரும் வெள்ளிக்கிழமை (24ந்தேதி) சென்னை சென்டரல் ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் உபயோகப்படுத்தும் வகையில் இலவச வைபை வசதியை மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தொடங்கி வைக்கிறாரர். அதை அடுத்து  ‘ஆயூஷ்’ திட்டத்தின்படி பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் மரபு சார்ந்த மருத்துவ சேவை வசதிகளையும் தொடங்கி வைக்கிறார்.
காலை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை  வீடியோ கான்பரன்சிங் மூலம் பல்வேறு திட்டங்களை சென்னையில் இருந்து தொடங்கி வைக்கிறார்.
மேலும் இந்தியாவிலேயே முதல் முறையாக ராமேசுவரம்–மானாமதுரை இடையே பசுமை வழித்தடம், நெல்லை ,சேலம் ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), அரியலூர்–மாத்தூர் ரெயில் நிலையங்கள் இடையே 25 கி.மீ. தூரத்துக்கு மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரெயில்பாதை, திருவள்ளூர்–திருவாலங்காடு இடையே 16.83 கி.மீ. தூரத்திலான 4–வது வழித்தடம், திருச்சி ரெயில் நிலையத்தில் அதிவேக ‘வை–பை’ வசதி ஆகியவை தொடங்கி வைக்கப்படுகிறது.