பாஸ்போர்ட் கட்டணம் 10 சதவிகிதம் குறைப்பு! சுஷ்மா

டில்லி,

சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான  பாஸ்போர்ட்டி கட்டணத்தில் 10 சதவிகிதம் குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் சுஷ்மா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ‘பாஸ்போர்ட் சேவா’ என்ற  பாஸ்போர்ட்  அதிகாரிகளுடனான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கான கட்டணத்தில் 10% குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8 வயதுக்கு குறைந்தவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே  10 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500 ஆக உள்ளது.. தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற ரூ.3,500 செலுத்த வேண்டும்.

ஆனால், தற்போது 10 சதவிகித கட்டண அறிவிப்பு தட்கலுக்கு பொருந்துமாக என்பது குறித்த விவரம் இன்னும் தெரியவில்லை.


English Summary
Central Minister Susma swaraj announces 10% reduction in passport fee for applicants under 8 yrs & over 60 yrs