பெங்களூரு

த்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் மாநில எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாதிவாரி  கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றன.  அதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுவரை செவிசாய்க்காமல் உள்ளது. நேற்று பெங்களூரில் மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 

அவர் தனது பேட்டியில்,

”நாட்டில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள்தொகை அதிகரித்துள்ளது. தற்போது அவர்களுக்கு 22½ சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆகவே அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று அந்த மக்கள் கேட்கிறார்கள்.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதாக ராகுல் காந்தி சொல்கிறார். இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இதை அவர் ஏன் செய்யவில்லை?.

அவசியம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவை என்றும். அதை நடத்த வேண்டும் என்று நாங்களும் கேட்கிறோம்.  இனி வரும் காலத்தில் பிரதமர் மோடி இதைச் செய்வார் .

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளிலும், பா.ஜனதா 370 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்து இருந்தது. தற்போது மோடி பிரதமரான பிறகு ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது.”

என்று தெரிவித்துள்ளார்.