டில்லி
விரைவில் யுஜிசி, ஏஐசிடிசி உள்ளிட்ட அமைப்புகளுக்கு மாற்றாக புதிய உயர் கல்வி ஆணைய மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைசர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வித்துறையை ஒரே குடையின் கீழ் ஒழுங்குபடுத்துவதற்காக இந்திய உயர்கல்வி ஆணையம் (எச்.இ.சி.ஐ) அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதாவது பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.), இந்திய தொழில்நுட்பக்கல்வி க \ழகம் (ஏ.ஐ.சி.டி.இ.) மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கழகம் (என்.சி.டி.இ.) போன்ற அமைப்புகளுக்கு பதிலாக ஒரே அமைப்பாக இது அமைக்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த ஆணையம் அமைப்பதற்கான வரைவு மசோதா ஒன்று உருவாக்கி பொதுமக்களின் கருத்துக்காக வெளியிடப்பட்டது. பிறகு 2021-ம் ஆண்டு மத்திய கல்வி அமைச்சராகப் பதவியேற்ற தர்மேந்திர பிரதான், இந்த மசோதாவை இறுதி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.