தன்னுடைய இலக்குகளில் ஒன்றான ராமர் கோவில் கட்டும் விவகாரம் சுமூக முடிவுக்கு வந்துவிட்டதால், தாம் ஓய்வு பெறும் நேரம் நெருங்கிவிட்டதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பாஜக அரசில் அமைச்சராக இருக்கும் கிரிராஜ் சிங், சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவிப்பதற்கு பெயர்போனவர். மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசுக்கு பல சர்ச்சைக்குறிய திட்டங்களை யோசனைகளாக வழங்கிய கிரிராஜ் சிங், தாம் அரசியலில் இருந்து ஓய்வுப் பெறும் நேரம் நெருங்கிவிட்டதாக தற்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கிரிராஜ் சிங், “என்னுடைய அரசியல் வாழ்க்கையில், ராமர் கோயில் கட்டுவது மற்றும் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது ஆகியவை எனது 2 முக்கியமான இலக்குகள். என்னுடைய இலக்குகளில் ஒன்றான ராமர் கோயில் கட்டுவது இறுதி கட்டத்துக்கு நெருங்கி விட்டது. அதனால் என்னை போன்ற மக்கள் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. மக்கள் தொகையை கட்டுபடுத்துவதற்கான ஒரு சட்டத்தை அமல்படுத்திய பிறகு நான் அரசியலிருந்து ஓய்வு பெற்று விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.