கொல்கத்தா
இன்னும் ஒரு வரத்தில் நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்படும் என மத்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடிபெயர்ந்தவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதை பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. நாடு முழுவதும் இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்களும் வெடித்ததால் இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து இந்த சட்டத்தின் அமலாக்கம் குறித்துப் பேசி வருகிறார்.
மத்திய துறைமுகங்கள், நீர்வழித்துறை இணை அமைச்சர் சாந்தனு தாகூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் தனது பேட்டியில்
”இன்னும் ஒரு வாரத்துக்குள் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். அமல்படுத்தப்படும். இதற்கு நான் உத்தரவாதம். இந்த சட்டம் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அமல்படுத்தப்படும்”
என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் பேசி வரும் வேளையில் சாந்தனு தாகூர், ஒரு வாரத்துக்குள் சட்டம் அமல்படுத்தப்படும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.