சென்னை
வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகிறார்.
நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் மற்றொரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிடுகின்றன.
கட்சித் தலைவர் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு எனப் பலகட்ட பணிகளைப் பக்குவமாக முடித்து தற்போது சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யத் தொடங்கி விட்டனர்.
தமிழகத்தில் பா.ஜ.க வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று மதுரை, சிவகங்கை தொகுதியிலும், ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று சென்னையிலும் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.