டில்லி

டந்த 12 ஆம் தேதி பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண அறிவிப்பின் மூன்றாம் பகுதி விவரங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்ட ஊரடங்கு நாளை மறுதினம் முடிவடைய உள்ள நேரத்தில் கடந்த 12 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றினார்.  அவர் தனது  உரையில் ஊரடங்கு காரணமாக நலிவடைந்துள்ள பொருளாதார மேம்பாட்டுக்காக ரூ.20 லட்சம் கோடி நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.  அது குறித்த விவரங்களை நேற்று மற்றும் நேற்று முன் தினம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரித்தார்.

இன்று அவர் இந்த நிவாரண திட்டத்தின் மூன்றாம் பகுதியின் விவரங்களைத் தெரிவித்துள்ளார்.  நிர்மலா சீதாராமன், அறிவித்துள்ள விவரங்கள் பின் வ்ருமாறு:

நாடெங்கும் வேளான் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ள்து.  இந்த ரூ.1 லட்சம் கோடி நிதி உடனடியாக வங்கிகளில் செலுத்தப்படும்

உள்ளூர் சிறு மற்றும் குறு உணவு உற்பத்தியாளர்களுக்கு ரூ.10000 கோடி ஒதுக்கப்படுகிறது.  இந்த தொகை உள்ளூரில் தயாரிப்போம் என்னும் திட்டத்தின் கீழ் வழ்ங்கபடுகிறது. மேலும் சிறு தானியங்கள், ஆர்கானிக் பொருட்கள் மற்றும் மஞ்சள் போன்ற பொருட்களுக்கு இந்த நிதி மூலம் உலக அளவில் விளம்பரம் அளிக்கப்படும்.

காஷ்மீர் குங்குமப்பூ, உத்தரப்பிரதேச மாம்பழம் மற்றும் ஆந்திர மிளகாய் போன்றவற்றை உலக அளவில் சந்தைப்ப்டுத்த திட்டம் தீட்டப்பட உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்ப விளை பயிரை மையமாக்க கொண்டு உணவு நிறுவன பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.

மூலிகை பொருட்கள் விவசாயம் செய்ய ரூ, 4000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.   இதைக் கொண்டு  கங்கை நதிக்கரையின் இரு பக்கங்களிலும் மூலிகை தோட்டங்கள் 200 ஹெக்டேர் பரப்பில் உருவாக்கப்பட உள்ளது.   இங்கு மூலிகை மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி நடைபெறும்.  இதன் மூலம் ரூ5000 கோடி வருமானம் ஈட்ட முடியும்.

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்டவைகளுக்கு தற்போது போக்குவரத்து மானியம் வழங்கப்படுகிறது.  அது அனைத்து காய்கறி மற்றும் பழங்களுக்கு விரிவு படுத்தப்படுகிறது.

விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும்

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு  வெங்காயம், பருப்பு வகைகள் மற்றும் ஒரு சில எண்ணெய் வகைகள் இதில் இருந்து நீக்கப்படுகின்றன.

தேனி வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தி ஆகியவற்றை ஊக்குவிக்க ரூ.500 கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  இதன் மூலம் 2 லட்சம் தேன் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள்.

கால்நடைகளுக்குக் கால் மற்றும் வாய் மூலம் ஏற்படும் சிகிசக்ககாக ரூ.13343 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.    இந்த கால்நடை பராமரிப்பு திட்டத்தின் கீழ் 53 கோடி கால்நடைகளுக்குத் தடுப்பூசிகள் வழங்குவது தீவிரப்படுத்தப்பட உள்ளது.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய முன் வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

மீனவர் நலனுக்காக ரூ.11000 கோடி மற்றும் மீன்வளத்துறை கட்டமைப்புக்காக ரூ.9000 கோடி  ஒதுக்கிடப்பட்டுள்ளது.  வரும் 5 ஆண்டுகளில் இதன் மூலம் கூடுதலாக 70 லட்சம் டன் மீன் உற்பத்திக்கான வழிகள் செய்யப்படும்.  மீன் பிடிக்க வசதியாக புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்.