டில்லி

த்திய அரசு செயல்படாமல் உள்ள உயர் அரசு அதிகாரிகளை நீக்க நடவடிக்கை எடுக்க உள்ளது.

மத்திய அரசில் 45.41 லட்சம் ஊழியர்கள் பணி புறிந்து வருகின்றனர். இவர்களில் ராணுவம், ரெயில்வே, தபால் துறை ஆகிய துறைகளின் அதிகாரிகளும் அடங்குவார்கள். அரசு உயர் அதிகாரிகளில் பலர் 50 வயதை தாண்டியவர்களாக உள்ளனர். அரசு சட்டப்படி 50 முதல் 55 வயது ஆனவர்கள் அல்லது 30 வருட அனுபவம் கொண்ட அதிகாரிகள் ஆகியோர் செயல்பாடு பரிசீலிக்கப்படும்.

அவர்களின் செயல்பாடு குறைவாகவோ அல்லது செயல்பாடற்றதாகவோ இருப்பின் அவர்களுக்கு பணி ஓய்வு அளிக்க அரசுக்கு உரிமை உண்டு.  கடந்த 2014 ஆம் வருடம் மோடி அரசு பதவி ஏற்றதும் இந்த விதிமுறை மூலம் பல அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களில் பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் முதல் நிலை அதிகாரிகள் ஆவார்கள்.

தற்போது மோடி அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. அதைத் தொடர்ந்து மீண்டும் இந்த செயல்பாடு சோதனைகளை தொடங்க அரசு தீர்மானித்துள்ளது. இப்போது முதல் நிலை அதிகாரிகள் மட்டுமின்றி அனைத்து நிலை ஊழியர்களுடைய செயல்பாடுகளும் பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட திட்டமிடப் பட்டுள்ளது.

இதன் மூலம் இன்னும் இரு வருடங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணித்திறன் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதை ஆபரேஷன் கிளீன் அப் என அழைக்கப்படுகிறது.

அதே நேரத்தில் மத்திய அரசில் ஆறு லட்சம்  பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது குறிப்பிடத்தகக்து.