டில்லி

கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் உற்பத்தி அதிகரிப்புக்கு சிறப்பு நிதி உதவி வழங்க  உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு தீவிரமாக்கி உள்ளது.   இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.   ஆயினும் தடுப்பூசி பற்றாக்குறையால் பல இடங்களில் அது நடைபெறவில்லை,.

இதையொட்டி பல மாநிலங்களில் சர்வதேச ஒப்பந்தப்புள்ளி மூலம் கொரோனா தடுப்பூசியைக் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளன.   இதில் தமிழகம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அடங்கும்.   ஆகவே கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி கோவிட் சுரக்‌ஷா திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கச் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  இதற்காக கோவாக்சின் தயாரிக்கும் பாரத் பயோடெக் உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி உதவி வழங்க உள்ளது.

மேலும் கொர்ரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை கடுமையாக அதிகரிப்பதால் மொத்த தடுப்பூசி  உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  அதன்படி ஒரு மாததில்  மொத்த தடுப்பூசி உற்பத்தி 10 டோஸ்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

Corona, vaccine, production increase, Special finance help, Central govt, கொரோனா, தடுப்பூசி, உற்பத்தி அதிகரிப்பு, சிறப்பு நிதி உதவி, மத்திய அரசு