டில்லி

மூக பாதுகாப்புத் துறைகளான பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் இஎஸ்ஐ ஆகியவற்றின் விதிமுறைகளை மத்திய அரசு மாற்ற உள்ளது.

சமூக பாதுகாப்புத் துறைகளான பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் இ எஸ் ஐ ஆகியவை தொழிலாளர் நலனுக்காகச் செயல்படும் தன்னாட்சி நிறுவனங்களாகும்.   இந்த துறைகள்  நாடாளுமன்ற விதிகளின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும்.   இந்த  இரு துறைகளையும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் நிர்வகித்து வருகின்றது.

இந்த இரு துறைகளில் தலைவராகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இருந்து வருகிறார்.  துணைத் தலைவராகத் தொழிலாளர் நலத்துறைச் செயலர் பதவி வகித்து வருகிறார்.   தற்போது இந்த இரு துறைகளின் விதிமுறைகளை மாற்றும் மசோதா ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.   இந்த மசோதாவின் மாதிரி வரைவு பொதுமக்கள் கருத்துக்காக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வரைமுறை மசோதாவின் படி இனி இந்த இரு துறைகளுக்கும் தனித்தனியே தலைமை செயல் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.  இந்த அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருப்பார்கள்.   இந்த புதிய விதிமுறைகளின் மூலம் இந்த இரு துறைகளும் இனி கார்பரேட் நிறுவனங்களாகச் செயல்பட உள்ளன.

 

ஏற்கனவே மத்திய அரசு 44 மத்திய தொழிலாளர் சல சட்டத்தை 4 பிரிவுகளாகப் பிரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.