டில்லி

த்திய அமைச்சர் அனுராக் தாக்குர் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்

ஒவ்வொரு வருடமும் பொதுத்துறை மற்றும் தனியார் ஊழியர்களுக்குத் தீபாவளி பண்டிகை சமயத்தில் போனஸ் வழங்குவது வழக்கமாகும்.  இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறைகளில் ஒன்றான ரயில்வேத்துறை ஊழியர்களுக்கான பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

இந்த பேச்சு வார்த்தையில் தற்போது ஒரு முடிவு எட்டி உள்ளது.  அதன்படி ரயில்வே ஊழியர்களுக்கு 2020-21 ஆண்டில் 78 நாட்களுக்கான ஊதியம் போனசாக வழக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இதன்மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெற உள்ளனர்.

இந்த தகவலை மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்துள்ளார்.  மேலும் அவர் இந்த போனஸ் அதிகாரிகள் அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.