அங்கீகரிக்கப்பட்டதை விட ரூ.99610 கோடி அதிகம் செலவு செய்த மத்திய அரசு

Must read

டில்லி

ங்கீகரிக்கப்பட்டதை விட ரூ. 99,610 கோடி மத்திய அரசு பாராளுமன்ற ஒப்புதல் இன்றி அதிகம் செலவு செய்துள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு செலவுக்கு ஒவ்வொரு வருடமும் நிதி நிலை அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்குள் அரசு தனது செலவுகளை செய்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் நிதி தேவைப்படும் என்றால் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்பது சட்டமாகும். அத்துடன் அவ்வாறு ஒப்புதல் பெறாமல் செலவு செய்யக் கூடாது என்பதும் சட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மத்திய கணக்கு தணிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்ற 2017-18 ஆம் ஆண்டில் மத்திய அரசு தனக்கு அங்கீகரிக்கப்பட்ட நிதியை விட ரூ.99,610 கோடி அதிகம் செலவு செய்துள்ளது. இதற்கான பாராளுமன்ற ஒப்புதல் பெறாமல் இந்த செலவை அரசு செய்துள்ளது. ஆகையால் இந்த செலவு இனங்கள் சட்டத்தை மீறி செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் கடந்த 2017-18 ஆம் வருடம் 18 இனங்களில் அங்கீகரிக்கப்பட்ட நிதியில் இருந்து செலவு ஏதும் செய்யப்படாமல் உள்ளது. அத்துடன் 11 இனங்களில் அங்கீகரிக்கப்பட்டதை விட ரூ.11,017 கோடி ரூபாய் குறைவாக செலவாகி உள்ளது. அத்துடன் கல்வி நிதிக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் வரியான ரூ. 94.038 கோடி செலவு செய்யப்படாமல் அப்படியே உள்ளது.

நிதித்துராஇ அமைச்சகம் ரூ. 1157 கோடி பாராளுமன்ற ஒப்புதல் இன்றி அதிகமாக செலவு செய்துள்ளது. அனைத்து துறைகளின் அதிகப்படியான செலவுகளுக்கு பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டிய நிதி அமைச்சகமே ஒப்புதல் இன்றி அதிகம் செலவு செய்துள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

More articles

Latest article