டில்லி

ற்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. தினசரி பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் நிர்ணயிக்கப்பட்டு. எரிவாயு சிலிண்டர் விலை மாதத்திற்கு இருமுறை நிர்ணயிக்கப்படுகின்றன.

 தொடர்ந்து 592 நாட்களாகச் சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ102.63-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 லிட்டர் டீசல் ரூ94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கு முன்பாக மக்களைக் கவரும் வகையில் சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குளிர் காலத்தில் கச்சா எண்ணெய் தேவை குறைந்து இருப்பதால் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகக் கடந்த சில வாரங்களாகத் தகவல்கள் பரவி வந்தன.

குறிப்பாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்கவும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.6 குறைக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தகவல் வெளியானது. எனவே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவியது.

இன்று, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

”தற்போதைக்கு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு  இல்லை.  அத்துடன் தற்போது தெற்காசிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை 40 முதல் 80 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது”

என்று தெரிவித்துள்ளார்.