டில்லி

கொரோனா சிகிச்சைக்கான புதிய நெறி முறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது

சீன நாட்டின் வுகான் நகரில் சென்ற வருட இறுதியில் கண்டறியப்பட்ட  கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.  இந்த தொற்று பரவலுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.  இதுவரை பாதிப்பு அடைந்தோருக்குச் சிகிச்சைக்கான மருந்தும் கண்டறியப்படவில்லை.   ஆகவே கொரோனா சிகிச்சைக்கு அந்தந்த நாட்டுச் சுகாதார அமைச்சக வழிமுறையின்படி சிகிச்சை அளிக்கபடுகிற்து.

இந்தியச் சுகாதார அமைச்சகம்  அளித்துள்ள கொரோனா சிகிச்சை நெறிமுறைகளை திருத்தி புதிய நெறிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது.

அவற்றில் காணப்படும் முக்கிய விவரங்கள் இதோ :

  • மலேரியா சிகிச்சைக்கான மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுவின் மாத்திரைகளை வைரஸ் தொற்றின் ஆரம்ப நிலையில் மட்டுமே அளிக்க வேண்டும்.   தொற்று முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கக் கூடாது.  (ஏற்கனவே தீவர நோயாளிகளுக்கு இந்த மருந்துடன் அஹித்ரோமசிசின் சேர்த்து அளிக்கலாம் என்னும் நெறிமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
  • இந்த மாத்திரைகளை நோயாளிக்கு அளிப்பதற்குமுன்பு இ சி ஜி பரிசோதனை செய்வது நல்லது
  • அவசரக்கால பயன்பாட்டுக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தலாம்.
  • கொரோனா தீவிரம் மிதமாக உள்ளபோது பிளாஸ்மா சிகிச்சை அளிக்கலாம்.

என அறிவிக்கப்பட்டுள்ளது.