டில்லி

ற்போது உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசிடம் முறையான திட்டம் இல்லை என கங்ங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறி உள்ளார்.

தொடர்ந்து 7 ஆம் நாளாக ரஷ்ய நாடு உக்ரைன் மீது போரை நடத்தி வருகிறது.  இதில் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் ஒரு இந்திய மாணவர் உயிர் இழந்துள்ளார்.   இது உலகெங்கும் கடும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.  இதையொட்டி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சனி சவுத்ரி,

“மத்திய அரசு உக்ரிஅன் சூழ்நிலையை மதிப்பிட்டு முன் கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவதில் தோல்வி அடைந்துள்ளது.  இந்திய மாணவர் உக்ரைனில் நடந்த ராணுவ தாக்குதலில் உயிர் இழந்துள்ளது கடும் வேதனையை அளிக்கிறது. மத்திய அரசு பொறுப்பைத் தட்டி கழிக்க முடியாது..

உக்ரைன் நாட்டில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசிடம் முறையான திட்டம் ஏதும் இல்லை.    மாறாக நடைபெற்று வரும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் கவனம் செலுத்தி வந்தது.   நம்மிடம் உளவுத்துறை, செயற்கைக் கோள் எனப் பல இருந்தும் அதன் மூலம் தக்வல் கிடைத்தும் மத்திய அரசு ஒன்றும் செய்யாமல் இருந்துள்ளது.”

எனக் கூறி உள்ளனர்.