மும்பை

காராஷ்டிராவுக்கு வர வேண்டிய பெருநிறுவன சமுதாய பொறுப்பு  நிதியை மத்திய அரசு குஜராத்துக்கு அளித்துள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே  தெரிவித்துள்ளார்.

 

கார்ப்பரேட் நிறுவனங்கள் என சொல்லப்படும் பெரு நிறுவனங்கள் சமுதாய முன்னேற்றத்துக்காக மத்திய அரசுக்கு நிதி வழங்குவது வழக்கமாகும் அந்தந்த நிறுவனங்கள் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளனவோ அந்த மாவட்ட முன்னேற்றத்துக்கு இந்த நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே விதியாகும்.   இந்த விதியின் படி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வந்தது.

நாட்டின் வர்த்தகத்  தலைநகரம் எனக் கூறப்படும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏராளமான பெரு நிறுவனங்கள் அமைந்துள்ளன.   அவை மகாராஷ்டிர மாநில முன்னேற்றத்துக்காகப் பெருநிறுவன சமுதாய பொறுப்பு நிதிக்கு ஏராளமான தொகைகளை அளிக்கின்றனர்.   இவை அனைத்தும் மகாராஷ்டிர மாநிலத்துக்கு உரிய தொகை ஆகும்.

ஆனால் இந்த நிதியில் சுமார் 75% வரை குஜராத் மாநிலத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்துள்ளது.  இதையொட்டி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, “பெருநிறுவன சமுதாய பொறுப்பு நிதியில் 75% வரை குஜராத் மாநிலத்துக்கு மத்திய அரசு அளித்துள்ளது.  அவை ஏன் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கவில்லை.  இது மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.