டில்லி

த்திய அரசு தற்போதைக்கு மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான அந்தஸ்து அளிக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது.

நேற்று மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்  மாணிக்கம் தாகுர் ஆகியோர் மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதித்ராதித்ய சிந்தியாவைச் சந்தித்தனர்.  அப்போது அவர்கள் கோரிக்கை மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கார்த்தி, வேலுச்சாமி, விஜய் வசந்த், தனுஷ் குமார் மற்றும் நவாஸ் கனி ஆகியோர் கையெழுத்து இட்டிருந்தனர்.

அந்த மனுவின் மூலம் அவர்கள் மதுரை விமான நிலையத்துக்குச் சர்வதேச விமான நிலய அந்தஸ்து அளிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டனர்.  இந்த மனுவைப் பெற்ற மத்திய அமைச்சர் அவர்களிடம் மதுரை விமான நிலையத்தை தற்போதைக்கு சர்வதேச விமான நிலையமாக மாற்ற வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சரவை வட்டாரங்கள், “ஒரு சில வட மாநிலங்களில் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் மட்டுமே உள்ளது.  ஆனால் தமிழகத்தில் 3 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.  ஆகவே மதுரையைச் சர்வதேச விமான நிலையமாக மற்ற இயலாது.   ஆனால் மதுரையில் இருந்து அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூருக்கு விமானங்கள் இயக்க முன்னுரிமை வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளன.