டில்லி

ந்தியப் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வந்த செய்தியை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது

சீனா நமது லடாக் எல்லையில் உள்ள இந்தியப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின.  இந்த பகுதியில் உள்ள பான்காங் பாகுதியில் சீனா ஒரு புதிய பாலத்தைக் கட்டி உள்ளதாகவும் அதன் மூலம் சீன ராணுவத்தின் கனரக வாகனங்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முடியும் எனவும் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்கி செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.   அப்போது அவர் ”லடாக் எல்லையில் உள்ள இந்தியப் பகுதியான பான்காங் ஏரி அருகே சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது உறுதியான செய்தியாகும்.  இங்கு ஏற்கனவே சீனா பாலம் ஒன்றை அமைத்துள்ளது.

தற்போது வெளியான செய்தியில் குறிப்பிட்டுள்ளது அந்த பாலத்தின் விரிவாக்கமாக இருக்கலாம்.  இந்தியா தனது எல்லையில் பயங்கரவாதத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.  சீனாவின் நகர்வுகளை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.