திருவனந்தபுரம்
மீடியா ஒன் மலையாள செய்தி சேனல் ஒளிபரப்பு அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
மலையாள மொழி செய்தித் தொலைக்காட்சிகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் சேனலக்ளில் மீடியா ஒன் சேனலும் ஒன்றாகும். இந்த சேனலின் ஒளிபரப்பு அனுமதியைக் கடந்த 2000 ஆம் ஆண்டு மத்திய அர்சு தடை செய்தது. கடும் போராட்டத்துக்கு பிறகு மலையாள செய்திச் சேனலான மீடியா ஒன் சேனலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சேனலின் ஒளிபரப்பு அனுமதியை மீண்டும் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் ரத்து செய்துள்ளதன். இதனால் இந்த அமைச்சகத்தின் அனுமதிக்கப்பட்ட பட்டியலில் உள்ள சேனல்களில் இருந்து மீடியா ஒன் டிவியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்த ஒளிபரப்பு சேவை தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.
மீடியா ஒன் சேனலில் ஜமாத் இ இஸ்லாம் கட்சியின் கேரள மாநிலத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர். இதனால் இந்த சேனலுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.; இதனால் சேனலின் அனுமதி ரத்து செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
கேரள மாநிலத்தின் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த சேனல் அனுமதி ரத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.