டில்லி

டல் மணலில் இருந்து கனிமம் எடுப்பதை தடை செய்ய மத்திய அரசு விதிமுறைகளை மாற்றி உள்ளது.

நமது நாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் ஒரிசா மாநில கடலோர மணலில் ஏராளமான கனிமத் தாதுக்கள் உள்ளன.  அவை கார்னெட், இல்மினைட்,  மோனசைட் உள்ளிட்ட பல தாதுக்கள் ஆகும்.  இதில் மோனசைட் என்பது அணு சம்பந்தமான கனிமத் தாது ஆகும்.    இதை பதப்படுத்தி அணு எரிபொருளான யுரேனியம் தயாரிக்க முடியும்.

இந்த தாதுக்களை எடுக்க தனியாருக்கு கடல் மணலில் கனிமச் சுரங்கம் அமைக்க உரிமம் அளிக்கப்பட்டு வந்தது.    ஆனால் பல நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் மோனசைட் எடுத்து சட்ட விரோதமாக கடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன.

இதை ஒட்டி மத்திய கனிம சுரங்க அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் பிப்ரவரி 20 ஆம் தேதி இட்ட இந்த அறிக்கையில் ”மத்திய அரசு அரிய வகை கனிமங்களை தனியார் எடுக்க தடை செய்யும் வகையில் அரசின் ஒரு சில சட்டப்பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன.

எனவே கடல் மணலில் இருந்து மோனசைட் உள்ளிட்ட எந்த ஒரு கனிமமும் எடுக்க சுரஙகம் அமைக்க தனியாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக மோனசைட் எந்த ஒரு தரத்தில் இருந்தாலும் எடுப்பது சட்டப்படி குற்றமாகும். ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.