டில்லி

ச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த 9 நீதிபதிகள் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் 9 பேரைப் பரிந்துரை செய்துள்ளது.   இதில் 8 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆவார்கள்.  ஒருவர் மூத்த வழக்கறிஞர் ஆவார். இந்த 9 பேரில் மூவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள்

  1. கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ எஸ் ஓகா
  2. குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத்
  3. சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே கே மகேஸ்வரி
  4. தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி
  5. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி பி வி நாகரத்னா
  6. கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி சி டி ரவி குமார்
  7. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம் எம் சந்தேஷ்
  8. குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பாலா எம் திரிவேதி
  9. மூத்த வழக்கறிஞர் பி எஸ் நரசிம்ஹா

ஆகியோர் ஆவார்கள்

மத்திய அரசு இந்த 9 நீதிபதிகளையும் பதவியில் நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.   இந்த ஒப்புதலின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் இந்த 9 பேரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உள்ளார்.