சென்னை
மத்திய அரசால் மூடப்பட்ட 108 மருத்துவ கல்லூரி மாணவர்களை தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த பொன்னையா ராமஜெய கல்லூரி மத்திய அரசின் விதிகளை நிறவேற்றாமல் இருந்தது. அதனால் இந்த கல்லூரி மத்திய அரசால் மூடப்பட்டது. இந்த கல்லூரியி க்ட்னத 2016-17 ஆம் கல்வி ஆண்டுக்காக 108 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர், அவர்கள் கோரிக்கைக்கு இணங்க அவர்களை தமிழக்த்தில் உள்ள 22 அரசு கல்லூரியில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக ரசு இதை எதிர்த்து மேல் முறையீடு செய்தது. அதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 108 மாணவர்களை சேர்க்க முடியாது என அரசு தெரிவித்திருந்தது. அதை ஒட்டி மத்திய அரசுக்கு இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கிணங்க மத்திய அரசு இந்த மாணவர்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதி வழங்கி உள்ளது
இந்த தகவலை அடுத்து தமிழக அரசு இந்த 108 மாணவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட உள்ளதாக உயர்நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது இந்த 108 மாணவர்களில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் 50 மாணவர்களையும், காஞ்சிபுரம் கற்பக விநாயகா, கோவை கற்பகம், சென்னை தாகூர், மதுரை வேலம்மாள் ஆகிய 4 கல்லூரிகளில் தலா 12 மாணவர்களையும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் 10 மாணவர்களையும் சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஒட்டி இந்த வழக்கை உயர்நீதிமன்ற மனு முடித்து வைத்துள்ளது.