டில்லி

த்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளது.

இன்று இஸ்ரேலில் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், ‘ஆபரேஷன் அல் அக்சா பிளட்’ என்ற பெயரில் திடீர் தாக்குதல் நடத்தின. இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டு இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் மற்று, ரிசர்வ் படைகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் அரசு அந்நாட்டில் போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்குத் தயார் என்றும் அறிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அங்கு உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும், தனியாக இருப்பதைத் தவிர்த்துப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அவசர தேவைக்கு இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளை அங்குள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.