டில்லி,

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையங்களை படிப்டிபயாக  மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன்படி  தமிழகத்தில் 3 வேளாண் ஆராய்ச்சி மையங்கள் மூட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 103 ஆராய்ச்சி மையங்களை வேளாண்துறை நடத்தி வருகிறது. இதில் முதல்கட்டமாக 43 மையங்களை மூட மத்திய அரசின் வேளாண்மை அமைச்சகம் கூறி உள்ளது.

இதுகுறித்து வரும் 27ந்தேதி நடைபெற உள்ள அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதன்படி சென்னையில் செயல்பட்ட வரும், இறால் ஆராய்ச்சி மையம் முதலில் மூடப்படும் சூழல் உருவாகி உள்ளது. மேலும்,  கோவை சர்க்கரை ஆராய்ச்சி மையத்தையும் மூட இருப்பதாக கூறப்படுகிறது.