சென்னை:

காவிரி வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து டில்லியில் நடந்த கூட்டத்தில் தமிழக அரசின் வாதங்களை பகிரங்கப் படுத்த வேண்டும். வாரியம் அமைப்பதில் தாமதம், குழப்பம் ஏற்படுவதை தடுக்க சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பில் இல்லை என நீர்வளத்துறை செயலாளர் கூறியது கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஆரம்பத்தில் இருந்தே மத்திய அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. தமிழக விவசாயிகளை திசை திருப்பும் வகையில் குழப்பத்தை ஏற்படுத்துவது வேதனை அளிக்கிறது’’ என்றார்.