சென்னை:

பேரிடர் காலங்களில் மத்திய அரசு வழங்கும் நிதி போதுமானதாக இல்லை என்று மத்தியஅரசு மீது தமிழக அரசின்  தலைமைச்செயலாளர் சண்முகம் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழகத்தின் 46-வது புதிய தலைமைச் செயலாளராக சேலம் அருகே உள்ள வாழப்பாடியைச் சேர்ந்த கே.சண்முகம் கடந்தஜூன் மாதம் 30ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். பல்வேறு அரசு பொறுப்புகளில் திறம்படி பணியாற்றிய சண்முகம் கடந்த 2010ம் ஆண்டு முதல்  நிதித்துறை செயலாளராக இருந்தவர்.

தமிழகஅரசின் கஜானா காலியான சமயங்களில், திறம்பட கையாண்டு,  தமிழகத்தின் நிதிச்சுமையை குறைத்தவர். மேலும் இயற்கை பேரிடர் ஏற்பட்டபோதும், ஏற்பட்ட திடீர் நிதிச்சுமையையும் திறமையாக கையாண்டு பாராட்டுதலைப் பெற்றவர் தலைமைச்செயலாளர் சண்முகம்.

சென்னையில் நடைபெற்ற,  புயல் மற்றும் நகர்ப்புற வெள்ளம் என்ற கருத்தரங்கில் தமிழக அரசின் தலைமைச்செய லாளர் சண்முகம் கலந்துகொண்டு பேசினார். அப்போது,  இயற்கை பேரிடர் காலங்களில் மத்திய அரசு செய்யக்கூடிய உதவி போதுமானதாக இருப்பதில்லை;  மாநில அரசு எதிர்ப்பார்க்கக்கூடிய உதவிகளையும் மத்திய் அரசு செய்வதில்லை…என்று மத்தியஅரசு மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் எத்தனையோ பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன.தமிழகம் சந்தித்த அனைத்து பேரிடர்களும் சிறந்த அனுபவங்களை கொடுத்துள்ளன. ஆனால், அதற்கான நிதி உதவி செய்வதில் மத்தியஅரசின் போக்கு திருப்தி யானதாக இல்லை என்றும்,  கடந்த 2015ம் ஆண்டு  சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் நீண்டகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவைத்து உள்ளது. மேலும் தேவையான முன்னேற்பாடுகள் குறித்து திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.