புதுடெல்லி:
ன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்திய நாட்டில் தன்பாலின திருமணங்களை சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசு சார்பாக பிரமாண பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், கணவன், மனைவி, குழந்தைகள் என இருக்கும் இந்தியாவின் குடும்ப கட்டமைப்பு இணையாக தன்பாலின திருமணங்களை கருத முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்காததால் அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒரே பாலினத்தவர்கள் திருமண செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என மத்திய அரசு இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.