டில்லி:

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவையொட்டி நாடு முழுவதும்  செயல்படுத்த உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

வரும் மே 2நதேதி டில்லியில்  பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  மே 2-ம்தேதி டில்லி பயணமாகிறார்.

அங்கு மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, பிரமர் மோடியிடம், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]