ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மத்திய அரசின் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. தென்கிழக்கு ஆசியாவிலேயே இயங்கி வந்த ஒரே போட்டோ பிலிம் தொழிற்சாலை கடந்த 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நேரடியாக 5 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 20 ஆயிரம் பேருக்கும்ம் வேலை வாயப்பு அளித்து வந்தது. 1996-ம் ஆண்டுமுதல் நலிவடைந்த தொழிற்சாலையாக இது அறிவிக்கப்பட்டது. 2 ஆண்டுகளாக 165 பேர் மட்டுமே பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இக்கட்டடம் தமிழக அரசு மருத்துவ கல்லூரி அல்லது தொழில்நுட்ப பூங்காவாக மாற்ற முயற்சிகள் நடந்து வருகிறது.