திருச்சி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக திருச்சி ஆட்சியருக்கு கடிதம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு காரணமாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிய குற்றவாளிகளை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமில் தங்கியுள்ளனர். இதற்கிடையில், விடுதலை செய்யப்பட்ட தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள நிலையில், உடல்நிலை பாதிப்பு காரணமாக, சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என இந்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து வந்தார். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், சாந்தனுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கை முன் வைத்திருந்தனர்.
சாந்தன் இலங்கை வர இலங்கை அரசுஅனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது மத்தியஅரசும் அனுமதி வழங்கி உள்ளது. திருச்சி இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் உள்ள சாந்தனை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அரசு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு அனுப்பி உள்ளது.
இதன் காரணமாக சாந்தன், , இன்னும் இரண்டு நாட்களுக்குள் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார், விமான டிக்கெட்டை சாந்தனே முன்பதிவு செய்யலாம் என என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், முருகன், இந்த நாசாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை அடுத்து 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நால்வரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை சொந்தநாட்டுக்கு அனுப்ப கோரி கோரிக்கைகள் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.