டெல்லி:

சுற்றுசூழலை பாதிக்கும் 12 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு போதுமான கால அவகாசம் வழங்கி மத்திய அரசு தடை விதித்தருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜ. அரசு மத்திய வேளாண் துறை ஒரு விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 28ம் தேதியிட்ட அந்த அறிவிப்பில் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக விவசாயிகளின் ஒத்துழைப்பை இதில் கோரப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 12 வகையான பூச்சி மருந்துகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்: பெனோமி, கார்பெரி, டையாஜினான், ஃபெனாரிமோல், ஃபென்தியோன், லி«னுரோன், எம்இஎம்சி, மெத்தில் பாராதியோன், சோடியம் சையனைட், தியோமிடன், ட்ரிடேமார்ப், ட்ரிஃலுரெலின் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இது 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அலக்லார், டிக்லோர்வோஸ், போரேட், பாஸ்பேமிடான், ட்ரையாஸோபோஸ்ல ட்ரிக்லோர்பன் ஆகியவை 2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இவை அனைத்தும் சுற்றுசூழலுக்கு அதிக அபாயம் ஏற்படுத்த கூடியவை. இவை அனைத்தையும், அதில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல் படி எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும். பூச்சிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படாலும், சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வழிகாட்டுதல் படி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு முழுமையான உடனடியாக தடை விதிக்காமல், கால அவகாசம் வழங்கியிருப்பது பலருக்கும சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.