சென்னை: ஈரப்பதத்துடன் கூடிய நெல்கொள்முதல் தொடர்பாக மத்திய குழு இன்று டெல்டா மாவட்டம் உள்பட பல பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிய, பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அறுவடை செய்யப்பட்ட விவசாயிகளிள் நெல்கள் முழுமையாக இன்னும் கொள்முதல் செய்யப்படவில்லை. மேலும் விவசாயிகள் கொள்முதல் நிலையங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெற்மூட்டைகளும் முறையாக தமிழ்நாடு அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காததால், பல பகுதிகளில் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கும் நிலைக்கு சென்றுள்ளது. இது விவசாயிகளிடையே திமுக அரசு மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கடுமையாக சாடியதுடன், விவசாயிகளுக்கு இந்த ஆண்டு கண்ணீர் மழை என்று கூறியிருந்தார். இதையடுத்து, திமுக அரசு, மத்திய பாஜக அரசுதான் காரணம் என அவர்கள்மீது பழிபோட்டது. இதையடுத்து ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், ஈரப்பதம் அளவை 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து மத்தியஅரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, மத்திய குழு இன்று தமிழ்நாடு வருகை தருகிறது. இந்த குழுவினர் டெல்டா மாவட்டங்களில் இன்று நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்கிறது. ஏற்கனவே நெல்லின் ஈரப்பதம் அளவு 17%ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதை 22 சதவீதமாக உயா்த்து குறித்து ஆய்வு செய்கிறது.
இந்த குழுவில் ஒரு டீம், செங்கல்பட்டிலும், மற்றொரு டீம் குழு தஞ்சாவூா், மயிலாடுதுறையிலும், 3வது டீம், திருச்சி, புதுக்கோட்டையிலும் ஆய்வு மேற்கொள்கிறது.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை முதல் குழுவானது திருவள்ளூா், காஞ்சிபுரத்திலும், 2-ஆவது குழு திருவாரூா், நாகப்பட்டினத்திலும், 3-ஆவது குழு மதுரை, தேனியிலும் நெல்லில் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய உள்ளன.
இந்த குழு கொடுக்கும் அறிக்கையைத் தொடர்ந்து ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதல் செய்வது குறித்து மத்தியஅரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.