முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரத்தின் சென்னை, டெல்லி வீடுகள் உள்பட 7 இடங்களில் சிபிஐ சோதனை…

Must read

சென்னை: முன்னாள் மத்தியஅமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான  ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் சென்னை, டெல்லி வீடுகள் உள்பட 7 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு, அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லி,. சென்னை, மும்பை உள்பட அவருக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் சென்னை, சிவகங்கையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களிலும்  சோதனை நடைபெற்று வருகிறது.

சிபிஐ சோதனை குறித்து டிவிட் பதிவிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்து விட்டேன், எத்தனை முறைதான் சோதனை நடத்தவீர்கள், இனிமேல் கவுன்ட் செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2 வருடத்திற்கு மேல் உங்கள் அலுவலகத்தை சுத்தம் செய்ய வில்லை ஆகையால் சுத்தம் செய்ய வந்திருக்கிறார்கள் சிபிஐக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article