டில்லி
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து இயற்றப்பட்ட சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த மே மாதம் 23ஆம் தேதி இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு நாடெங்கும் எதிர்ப்புகள் கிளம்பின. பல போராட்டங்களும் நிகழ்ந்தன. இதையொட்டி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
தற்போது மத்திய அரசு இந்தச் சட்டத்தை திரும்பப் பெற உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு இறைச்சி வர்த்தகர்கள், பல மாநில அரசுகள் மற்றும் எதிர்கட்சியினர் இந்தச் சட்டத்தினால் அதிருப்தி அடைந்ததால் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.