சென்னை: தமிழக அரசின் நடவடிக்கையால், சிமெண்ட் விலை மூட்டை 490 ரூபாயில் இருந்து ரூ.30 குறைத்து ரூ.,360க்கு விற்பனை செய்யப்படுவதாக சட்டமன்றத்தில் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டமான இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்ற  தொடரின் பேசிய தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடந்த ஆட்சியில் இருந்தே உயர்ந்து வருகிறது. சமீப காலமாக விலை கடுமையாக உயர்ந்து மூட்டை ரூ.490 விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கட்டுமான நிறுவனங்கள் உள்பட பல தரப்பில் கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு கோரிக்கை வந்ததால்,  கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள்  பாதிப்படைய கூடாது என்பதற்காக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, சிமெண்ட மற்றும் கம்பி உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதன் அடிப்படையில் தற்போது சிமெண்ட் மூட்டைக்கு ரூ.30 வரை குறைக்குப்பட்டு ரூ. 460 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.  மேலும் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.