டெல்லி: முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக்கி மரணம் அடைந்தது தொடர்பான ஊகங்களை தவிருங்கள் என ஊடகங்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் விமானப்படை வேண்டுகோள் விடுத்துள்ளது.
குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்துக்கு மனைவி மற்றும் அதிகாரிகளுடன் முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி வனப்பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ஊடகங்கள் டிபேட் எனப்படும் விவாதத்தை ஏற்படுத்தி, தேவையற்ற சர்ச்சைகளாக உருவாக்கி வருகின்றன. மேலும் பலர் சமூக ஊடகங்களில் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர். இதனால், விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ராணுவத்தினர் கடும் அதிருப்திஅடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்திய விமானப்படை தரப்பில், ஊடகங்கள் உள்பட அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உள்ள டிவிட்டில்,.