மும்பை நிகழ்ச்சிகளை ரத்து செய்து டெல்லி விரைந்தார் குடியரசுத் தலைவர்

Must read

மும்பை நிகழ்ச்சிகளை ரத்து செய்து டெல்லி விரைந்தார் குடியரசுத் தலைவர்

இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் இன்று நன்பகல் 12:27 மணிக்கு குன்னூரில் விபத்துக்குள்ளானது.

இந்த ஹெலிகாப்டரில் பிபின் ராவத்துடன் சேர்த்து மொத்தம் 14 பேர் பயணம் செய்தனர், இதில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டிருந்தது. பிபின் ராவத் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன.

இந்நிலையில், இன்று மாலை 6:30 மணிக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

கடற்படை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பியுள்ளார்.

More articles

Latest article