சென்னை: பதற்றமான வாக்குச்சாடிவகள் உள்பட சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்துதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் இனறு (வியாழக்கிழமை) மாலைக்குள் நிறைவு பெறும் என்று மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில்,1320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியபட்டு உள்ளது. இவற்றுள் 181 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்றளார்.
அதிகபட்சமாக மதுரை தொகுதியில் 511 வாக்குச்சாவடிகளும், தென் சென்னையில் 456 வாக்குச்சாவடிகளும், தேனியில் 381 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. திருவள்ளூர் தொகுதியில் 170, வடசென்னையில் 254, மத்திய சென்னையில் 192, ஸ்ரீபெரும்புதூரில் 337, காஞ்சிபுரத்தில் 371 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறியப்பட்டுள்ளன. பதற்றமான ஓட்டு சாவடிகளுக்கு, வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாகேவே துணை ராணுவம் அனுப்பி வைக்கப்படும். மேலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளுக்குட்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சென்னை தேர்தல் ஆணையரான ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாவட்டத்தில் உள்ள 3,726 வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதற்கு 299 பிரிவு அதிகாரிகள் (செக்டாா் மேஜிஸ்திரேட் ) நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவா்கள் காவல்துறையினா் கண்காணிப்பில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்திய வாகனத்தில் எட்டு முதல் ஒன்பது வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை தோ்தல் அலுவா்களிடம் வியாழக்கிழமை மாலைக்குள் கொடுப்பாா்கள்.
தென் சென்னையில் 456 வாக்குச்சாவடிகளும், வடசென்னையில் 254, மத்திய சென்னையில் 192 வாக்குச்சாடிகளும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. பதற்றமான 685 வாக்குச்சாவடிகள், மிகப் பதற்றமான 23வாக்குச்சாவடிகள் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், மகளிருக்கு பிரத்யேக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளதாகவும், பிங்க் வாக்குச்சாவடி என முழுவதுமாக பெண்கள் வாக்களிக்கும் வகையில் சென்னை முழுவதும் 16 பேரவை தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி என 16 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த சாவடிகளில் அனைத்து அலுவலா்களும் பெண்களாக இருப்பாா்கள் என்றாா்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் தோ்தல் அலுவலா்கள் ரஷ்மி சித்தாா்த் ஜகடே, ஆா்.லலிதா,ஜி.எஸ்.சமீரான், வட்டார துணை ஆணையா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.