சென்னை: தமிழகத்திலுள்ள தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

பள்ளி வாகனத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் தலா ஒரு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும். பேருந்து பின்னால் எடுக்கும்போது ஓட்டுநர் பார்ப்பதற்கு வசதியாக இந்த கேமரா பயன்படும் வகையில் அமைக்க வேண்டும். மேலும் வாகனத்தில் எச்சரிக்கை சென்சார் கருவி கட்டாயம் வைக்கப்படவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி வாகங்கள் மற்றும் அதன் ஓட்டுநர்களால் பள்ளி மாணவர்கள் பலியாவது அதிகரித்து வருகிறது.   தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர் களை பள்ளி நிர்வாகமே பேருந்தில் அழைத்துச்சென்று மீண்டும் வீடுகளுக்கு கொண்டுசென்று விடுகிறது. விபத்துக்களை இந்த வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலகர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அவ்வபோது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், தமிழகத்திலுள்ள பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும்  பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட வேண்டும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி,  பள்ளி வாகனங்களின் முன்பக்கமும், பின்பக்கமும் தலா ஒரு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என்றும், பின்புறமும் சென்சார் கருவியை வைக்க வேண்டும் என கூறியுள்ளது.