சென்னை: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கி உள்ளது. இந்த தேர்வினை 43.67 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை இந்தியாவைத் தொடர்ந்து வெளிநாடுகளும் சேர்த்து மொத்தம் 27 நாடுகளில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர், இந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் 43.67 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோன்று, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 17ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி நிறைவடையும் என முன்பே தேர்வுத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பை சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி,  12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள்களை இனி ஆன்லைன் முறையில் மதிப்பீடு செய்ய தீர்மானித்துள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE)  அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை மூலம் மதிப்பீட்டு செயல்முறையில் ஏற்படும் பிழைகள் குறைய வாய்ப்புள்ளதாகவும், ஆசிரியர்களின் பணிச்சுமை மற்றும் அலைச்சல் குறையும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழலில், 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைன் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன. அதன் பின்னர் ஆசிரியர்கள் கணினி மூலம் அவற்றை மதிப்பீடு செய்து மதிப்பெண்களை பதிவுசெய்ய வேண்டியுள்ளது.

இந்த முறை நடைமுறைக்கு வரும் நிலையில், பள்ளிகளில் தேவையான கணினி மற்றும் இணைய வசதிகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யுமாறும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில், 10ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் வழக்கம்போல் ஆசிரியர்களால் கைப்பட மதிப்பீடு செய்யப்படும் என்றும் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை இந்தியாவைத் தொடர்ந்து வெளிநாடுகளும் சேர்த்து மொத்தம் 27 நாடுகளில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]