புதுடெல்லி: ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் நிலையில், பள்ளி மாணாக்கர்களுக்கான சைபர் பாதுகாப்பு கையேடுகளை சிபிஎஸ்இ வழங்கியுள்ளது.
சிபிஎஸ்இ சார்பாக, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு, சிபிஎஸ்இ அமைப்பு, சைபர் கிரைம் பாதுகாப்பு கையேடுகளை வழங்கியுள்ளது.
இந்த கையேட்டில் ரிவென்ஜ், போர்னோகிராபி என்னும் தவறான படங்கள், வீடியோக்கள், பழிதீர்க்கும் செயல்கள், சம்மதமின்றி வெளியாகும் தகவல்கள், பிளாக்மெயில் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ சார்பில் கூறப்படுவதாவது; பகிரக்கூடாத படங்களால் மாணாக்கர்களின் நலன் பாதிக்கக்கூடும். ஆன்லைனில் ஒருமுறை பகிரப்பட்டால் அதன் பாதுகாப்பு தன்மை கேள்விக்குறியாகும்.
எனவே மனநலன், நற்பெயர் போன்றவற்றுக்கு கேடு விளைவிக்காத ஆன்லைன் பயன்பாட்டு வழிமுறைகள் குறித்து கையேட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.