புதுடெல்லி:
சி.பி.எஸ்.சி 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் குறைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு வகுப்புகள் சரியாக நடத்தப்படவில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் 30 சதவிகிதம் குறைக்கப்பட்டது. இந்நிலையில், சி.பி.எஸ்.சி 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில், குறைக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள மாணவர்கள், இணையத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.