நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன.
பன்னிரண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்வர்களும், அமைச்சர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில், கல்வி துறை அமைச்சர் மற்றும் சி.பி.எஸ்.சி. அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை தள்ளிவைப்பதென்றும், பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போலவே திறனறி தேர்வு மூலம் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்றும், இதில் ஆட்சேபனை உள்ள மாணவர்களுக்கு நிலைமை சீரடைந்த பின் முறையான தேர்வு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு, கொரோனா தொற்று நிலைமையை பொறுத்து ஜூன் மாதம் 1 ம் தேதிக்கு பின் தேர்வு தேதி அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.