டில்லி,

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள  சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்துவதும் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 5ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4ந்தேதி வரை நடைபெறுகிறது.

அதுபோல 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தேர்வு காலை 10.30 மணிக்கு துவங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு  கால அட்டவணை  http://cbse.nic.in/newsite/index.html என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வின் கால அட்டவணை : http://cbse.nic.in/newsite/attach/ds1018.pdf

12-ம் வகுப்பு தேர்வின் கால அட்டவணை: http://cbse.nic.in/newsite/attach/ds1218.pdf

இத்துடன் ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்இ தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.